பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

வில்லியனூர், பிப். 17: வில்லியனூர் அடுத்த அகரம் பகுதியில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வில்லியனூர் அடுத்த அகரம் புதுநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அங்குள்ள தெருவிளக்கு பழுதடைந்து நீண்டகாலமாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாக யார் செல்கிறார்கள் என்றுகூட தெரியாத நிலையுள்ளது. இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

மேலும், பள்ளி கல்லூரி சென்று வீடு திரும்பும் மாணவர்கள், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் மக்கள் என அனைவரும் மாலையில் இருண்டபிறகு அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஒருவரைக்கு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மின்துறை அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைத்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: