×

விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாகூர். பிப். 17: கிருமாம்பாக்கத்தில் ஏம்பலம், பாகூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் விரோத சட்டம் என்பதை விளக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் தேசம் காப்போம் பேரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏம்பலம் தொகுதி செயலாளர் ஈழவேந்தன் தலைமை தாங்கினார். பாகூர் தொகுதி செயலர் பைந்தமிழ் வளவன் வரவேற்றார். மணிமாறன், திருவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் பாவாணன், கிறித்துவ மக்கள் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ், கபிலன், ஜலாலுதீன், அன்பரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒருங்கிணைப்புக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். தொகுதி துணை செயலாளர் வீரவளவன் என்கிற வீரபாலன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED 20 வினாடிகள் கைகளை தேய்த்து கழுவ...