×

சாலை தடுப்பு கட்டையில் பைக் மோதி இன்ஜினியர் சாவு

புதுச்சேரி, பிப். 17: புதுவை வெங்கட்டாநகர் பகுதியை சேர்ந்தவர் நூர்முகமது (25). எம்.டெக் முடித்துள்ள இவர், வளைகுடா நாடான கத்தாருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்திருந்தார். 3 மாதத்தில் அங்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நூர்முகமது பைக்கில் நண்பர் அருண் என்பவருடன் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சென்றார். அப்போது சாலை தடுப்புக்கட்டையில் பைக் மோதியது. மேலும், எதிரே வந்த லாரி மீதும் மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையுை் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நூர்முகமது பரிதாபமாக இறந்தார். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Engineer ,
× RELATED கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று...