அருணா பள்ளியில் முப்பெரும் விழா

உளுந்தூர்பேட்டை, பிப். 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அருணா மேல்நிலைப்பள்ளியின் 34ம் ஆண்டு விழா, சிலைகள் திறப்பு விழா மற்றும் புத்தகம் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. உலக தமிழ் கவிஞர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் புலவர் சீத்தா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் முனைவர் தொல்காப்பியன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் அங்கையற்கண்ணி, குழந்தை.தமிழரசன், மணிகண்ணன், திருநாவுக்

கரசு, முன்னாள் சேர்மன் வசந்தவேல், ரோட்டரி முன்னாள் ஆளுநர் அன்பழகன், அரிமா சாதன தலைவர் ஆனந்தரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பாராளுமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் ரவிக்குமார், கள்ளக்குறிச்சி கவுதமசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். எம்எல்ஏக்கள் உதயசூரியன், மஸ்தான், மாசிலாமணி, நலவாரியத்தின் முன்னாள் தலைவர் பொன்குமார் சமூக சேவர்களுக்கான விருதுகள் மற்றும் மாணவர்

களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் சேலம் யுனிவர்சல் மருத்துவமனை மருத்துவர் பிரசன்னா, நல்லாவூர் பெரியண்ணன், சிபிஐ சரவணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜாராமன், தாமோதரன், சூரியகுமார், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி செயலாளர் வசந்தி தொல்காப்பியன், இயக்குனர் அகிலன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: