உதவியாளர், காவலர் பணிக்கு நேர்காணல்

ரிஷிவந்தியம், பிப். 17: ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு கடந்த மாதம் 24ம் தேதி முதல் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில் அலுவலக உதவியாளருக்கு 138 பேரும், இரவு காவலருக்கு 41 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அதைத்தொடர்ந்து பகண்டை கூட்டு சாலையில் உள்ள ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் தலைமையில் அலுவலக மேலாளர்கள் சுப்பிரமணியன், நாராயணசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அயூப்கான், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரன், கலா, யாசின், ராஜேந்திரன், என்ஆர்ஜிஏ சுமதி, தணிக்கையாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேர்காணலில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

Advertising
Advertising

சங்கராபுரம்: சங்கராபுரம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள  இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த 54பேருக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் முன்னிலையில் நேர்காணல்  நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பூர்ணம், முகமதுஅலி, அருள்  ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: