×

சாராயம் விற்ற 2 பேர் கைது

மேல்மலையனூர், பிப். 17:  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிந்திப்பேட்டை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அருணாச்சலம் (36). இவர் தனது நிலத்தில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேரில் சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நொச்சலூர் தோப்பு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சங்கர் (42) என்பவர் தனது நிலத்தில் சாராய விற்பனை செய்தார். அவலூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் அவரை கைது செய்தார்.


Tags :
× RELATED தூத்துக்குடியில் மதுபானம் விற்ற...