×

கஞ்சா விற்ற 2பேர் கைது

விருத்தாச்சலம், பிப். 17: விருத்தாசலம் சப்- இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் போலீசார் விருத்தாசலம் செல்லியம்மன் கோயில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாச்சலம் பணிபூண்டார் வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அருணா(35) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திட்டக்குடி:   திட்டக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் திட்டக்குடி- பெருமுளை சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் மொபட் வைத்து கொண்டு கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அருள்மணி(52) என்பதும், திட்டக்குடி அடுத்துள்ள சிறுநெசலூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்மணியை கைது செய்து, அவர் பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED சங்ககிரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது