×

பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

முஷ்ணம், பிப். 17:   முஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட கார்மாங்குடி கிராமத்தில் பழங்குடி சமூகத்தினர் அரசு இடத்தில் உள்ள பாதையை பல ஆண்டாக பயன்படுத்தி வந்தனர். இந்த பாதையை அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் பாதையில் உள்ள மண்ணை அள்ளி தனது வயலில் போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பழங்குடி சமூகத்தினர் அந்த பாதை வழியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் முஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து சிதம்பரம் சார்- ஆட்சியர் விசுமகாஜன், முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி மற்றும் நில அளவையாளர் ராஜமோகன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் கிராம உதவியாளார் ஆகியோர் தொடர்புடைய கார்மாங்குடி கிராமத்திற்கு சென்று அளவீடு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கல் நடப்பட்டது. இதனையடுத்து சார்- ஆட்சியர் விசுமகாஜன் பாதையில் மண் எடுத்த விவசாயிடம் திரும்ப அந்த இடத்தில் மண்ணை கொட்டுமாறு தெரிவித்து நடவடிக்கை எடுத்தார். விரைந்து நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : road ,
× RELATED மருத்துவ, அபாயகரமான கழிவு அகற்றும்...