×

பண்ருட்டி பகுதியில் தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை

பண்ருட்டி, பிப். 17: பண்ருட்டி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுத்து வருகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பன்றிகள் அதிகளவு மேய்ந்து வருகின்றன. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை அறிந்து நகராட்சி உடனடியாக அதன் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் ஒவ்வொரு வீதியிலும் நாய்கள் அதிகளவு உலா வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்துகொண்டு கடிக்க வருகின்றன. நாய் கடித்தால் போதிய அளவு மருத்துவ சிகிச்சை செய்ய வசதிகள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இல்லை. ஆதலால் போர்க்கால அடிப்படையில் நாய்களை பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாய கடன் அட்டை
விழிப்புணர்வு முகாம்

Tags : area ,Panruti ,
× RELATED தெரு நாய்களுக்கு உணவு: மாநகராட்சி ஏற்பாடு