×

விவசாய கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்

பண்ருட்டி, பிப். 17: பண்ருட்டி அருகே மருங்கூரில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாய கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு முகாம் விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் விஜயா தலைமை தாங்கினார். வங்கி மேலாளர் ராஜேந்திரன், விஏஓ வஜ்ஜிரவேல், வார்டு உறுப்பினர் கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். விவசாய கடன் அட்டை, வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உரிய நேரத்தில் வேளாண் இடு பொருட்களை வாங்கிட இந்த விவசாய கடன் அட்டை பயன்படுகிறது.

 விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார்கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து அட்டையை பெற்றுக்கொள்ளலாம். வேளாண்துறையில் தண்ணீர்பாசன திட்டம், விவசாயிகள் ஓய்வூதிய திட்டம், பெயர்திருத்தம் செய்வது, மான்யத்தில் இடு பொருட்கள் பெறுவது குறித்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் அட்மா மேலாளர் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Camp ,
× RELATED அரூர் அருகே கிசான் கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்