×

மதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்

விருத்தாசலம், பிப். 17: விருத்தாசலம் எம்ஆர்கே நகரை சேர்ந்தவர் குமார் மகன் ராஜேஷ்(20). இவர் விருத்தாசலத்தில் உள்ள செராமிக் கம்பெனி ஒன்றில்  வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்டேட் பாங்க் காலனி அருகே செல்போன் டவர் அருகில், விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் ஆகாஷ், பரவளூரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் விஷ்வா மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த ராஜேஷ் என்கிற பாண்டா ஆகிய மூன்று பேர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.  

அப்போது ராஜேஷை அவர்கள் வழிமறித்து அவரை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜேஷின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், விஷ்வா, ராஜேஷ்(எ)பாண்டா  ஆகிய 3 பேர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதில் விஷ்வா மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.

Tags : attack ,
× RELATED கொரோனா தாக்குதலுக்கு மத்தியில்...