×

போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக ஆலோசனை கூட்டம்

கடலூர், பிப். 17:   கடலூரில் மத்திய மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூர் பாரதி சாலையில் கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நகர செயலாளர் குமரன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் சம்பத் பேசினார். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்ட சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடுவது.

வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது. நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சமட்டிக்குப்பம் சுப்பிரமணியன், முன்னாள் துணை சேர்மன் சேவல் குமார்,  சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சிதம்பரத்தில் அதிமுக கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு முன்பு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கடலூரில் நடந்த கூட்டத்திற்கு புதுநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Tags : AIADMK ,consultation ,
× RELATED முடக்கத்துக்குப்பின் பயணிகள் பாதுகாப்பு குறித்து ரயில்வே தீவிர ஆலோசனை