×

₹26 கோடி நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம்விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு

பெரணமல்லூர், பிப்.17: ₹26 கோடி நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி, கரைப்பூண்டி தனியார் சர்க்கரை ஆலையை வரும் 24ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.சேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, இந்த சர்க்கரை ஆலைக்கு வழங்கி வருகின்றனர். ஆனால், சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக கரும்பு கொள்முதல் செய்ததற்கு விவசாயிகளுக்கு தரவேண்டிய ₹52 கோடியை நிறுத்தி வைத்தது.

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ₹26 கோடியை மட்டும் வழங்கியது. மீதமுள்ள ₹26 கோடியை வழங்காமல் விவசாயிகளை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் விரிவான செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கடந்த ஆண்டு நிலுவைத்தொகையான ₹26 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி கரைப்பூண்டி தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.மேலும், கரும்பு பயிரிட்டு வெட்ட முடியாமல் காத்திருக்கும் விவசாயிகளுக்கு செய்யாறு, வேலூர் பகுதிகளில் செயல்படும் சர்க்கரை ஆலைகளுக்கு, வெட்டி எடுத்து செல்ல பரிந்துரை செய்ய வேண்டும், விவசாய கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags : Struggle farmers ,
× RELATED தஞ்சையில் அரசு சர்க்கரை ஆலை...