×

திருவண்ணாமலையில் கார் வாங்குவதாக கூறி பேட்டரி கடைக்காரரிடம் ₹6 லட்சம் மோசடி டிராவல்ஸ் அதிபர் கைது

திருவண்ணாமலை, பிப்.17: திருவண்ணாமலையில் கார் வாங்குவதாக கூறி பேட்டரி கடைக்காரரிடம் ₹6 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை தேரடி வீதியில் வசிப்பவர் பாபு(42). இவர் திருவண்ணாமலை அம்மணியம்மன் கோபுர தெருவில் பேட்டரி சர்வீஸ் கடை வைத்துள்ளார். திருவண்ணாமலை ராமலிங்கனார் 6வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(42). இவர் திருவண்ணாமலையில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.ெதாழில் ரீதியாக இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை, பாபுவிடம் தான் சலுகை விலையில் கார் வாங்கப்போவதாகவும், அதனால் `தனக்கு ₹6 லட்சம் கடன் வேண்டும், அந்த பணத்தை 2 மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்'''' என்று கூறினாராம்.அண்ணாமலை மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையில் பாபு, கடந்த 1.9.18 அன்று ₹6 லட்சம் கடன் கொடுத்தாராம். ஆனால் அண்ணாமலை, அந்த பணத்தை கொண்டு கார் வாங்காமல் வேறு வகையில் செலவழித்தாராம். இதுகுறித்து தெரியவந்ததும், `நீதான் கார் வாங்கவில்லையே அந்த பணத்தை திருப்பி கொடு' என்று அண்ணாமலையிடம் பாபு கேட்டாராம். ஆனால் அண்ணாமலை, பணத்தை திருப்பி கொடுக்காமல் பொய்யான காரணங்களை கூறி காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில், கடந்த 2.2.19 அன்று அண்ணாமலை பாபுவுக்கு ₹6 லட்சத்துக்கு திருவண்ணாமலையில் உள்ள ஒரு வங்கி காசோலையை கொடுத்தார். அதனை பெற்று கொண்ட பாபு, அதை கலெக்ஷனுக்கு திருவண்ணாமலையில் உள்ள மற்றொரு வங்கிக்கு கடந்த 4.2.19 அன்று அனுப்பி உள்ளார். ஆனால் அண்ணாமலை பெயரில் போதிய பணம் இல்லை என்று அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது. அப்போதுதான் அண்ணாமலை தன்னை ஏமாற்றியது பாபுவுக்கு தெரியவந்தது.இதுகுறித்து பாபு திருவண்ணாமலை கோர்ட்டில் புகார் மனு அளித்தார். இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அண்ணாமலை பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாமலைைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chancellor ,battery shopkeeper ,
× RELATED அடமான பத்திரத்தை திருப்பி தராததால்...