×

மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கணியம்பாடி சின்ன பாலம்பாக்கத்தில்

வேலூர், பிப்.17:கணியம்பாடி அடுத்த பாலம்பாக்கத்தில் நடந்த மாடு விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சின்ன பாலம்பாக்கத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. இவ்விழாவில் கணியம்பாடி, சின்ன பாலம்பாக்கம், காட்டுப்புத்தூர், கண்ணமங்கலம், சலமநத்தம், மூஞ்சூர்பட்டு, பென்னாத்தூர், சோழவரம், அரியூர், வேலூர், காட்பாடி, லத்தேரி, ஒடுகத்தூர், அணைக்கட்டு என பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
காலை 10 மணியளவில் மாடு விடும் விழாவை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் சரவணமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ெதாடங்கி வைத்தார்.மிககுறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன. இதில் முதல் பரிசாக ₹55 ஆயிரம் ரொக்கமும், 2ம் பரிசாக ₹45 ஆயிரம், 3ம் பரிசாக ₹35 ஆயிரம் என மொத்தம் 45 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாடு விடும் விழாவுக்காக அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சான்றளித்தனர். அதன் பின்னர் காளைகள் திடலில் ஓட அனுமதிக்கப்பட்டன.இதுதவிர காயமடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழுவும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதோடு காளைகள் ஓடும் பாதையின் இருபுறமும் சவுக்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததுடன், காளைகள் ஓடும் பாதையில் தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன.இவ்விழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இவர்களின் ஆரவாரக்கூச்சலுக்கு இடையே காளைகள் சீறிப்பாய்ந்தன. இவ்விழாவுக்காக வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : cow-feeding ceremony ,
× RELATED அணைக்கட்டு அடுத்த புலிமேடு...