அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் வரையறை பிசிஏ படித்தவர்கள் 2 ஆண்டுகள் மட்டும் எம்சிஏ படித்தால் போதும்

வேலூர், பிப்.17:எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைத்துள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் இச்சலுகையை பிசிஏ படித்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.நாடு முழுவதும் எம்சிஏ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் இளநிலை படிப்பை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதாலும் பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாடுகள் என்ற எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வம் பெருமளவில் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையிலும் எம்சிஏ படிப்பில் சேரும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் ஏஐசிடிஇ புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இணைந்த எம்சிஏ படிப்புக்கான வழிகாட்டுதலில், தற்போதைய நடைமுறையின்படி பிசிஏ படித்தவர்கள் மட்டும் எம்சிஏ படிப்பை 2 ஆண்டுகள் படித்தால் மட்டும் போதுமானது.அதேநேரத்தில் இதர இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்சிஏ படிப்பை 3 ஆண்டுகள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் தனது வழிகாட்டுதல் நெறிமுறைகளில் ஏஐசிடிஇ குறிப்பிட்டுள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: