விவசாய கிணறுகளிலும் தண்ணீர் எடுத்து விற்பனைஅதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகோடைக்காலத்தில் மக்கள் திண்டாடும் அபாயம்

வேலூர், பிப்.17:விவசாய கிணறுகளிலும் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதால், கோடைக்காலத்தில் தண்ணீருக்கு திண்டாடும் அபாயம் ஏற்படும் என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் விதிமீறல்களை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 921 மில்லி மீட்டராக உள்ளது. மாநிலத்தில் தனிநபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 750 கன மீட்டராக கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒப்பிடுகையில் சராசரி மழை அளவும், தனிநபருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவும் குறைவுதான்.லும் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க போதிய தடுப்பணைகள் இல்லாததால், அதிகளவில் தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது. இதற்கிடையில் ஆந்திராவில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் பாலாற்றில் தண்ணீர் வராமல் வறண்டுள்ளது.

Advertising
Advertising

இதுபோன்ற காரணங்களால் கோடைகாலத்தில் பயிரிட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட தொடங்கிவிடுகின்றனர்.ந்நிலையில், விவசாய கிணறுகளில் இருந்தும் முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யப்படுவதால் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் விற்பனையில் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.துகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:சமீபமாக விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், தண்ணீரின் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று தண்ணீர் விற்பனை செய்யப்படுவது குறித்து கேட்டால், ‘நாங்கள் விற்பனை செய்யவில்லை. சொந்த பயன்பாட்டுக்காக வேறு இடத்துக்கு எங்கள் தண்ணீரை கொண்டு செல்கிறோம். இலவசமாக தண்ணீர் கொடுக்கிறோம்’ என்பது போன்ற காரணங்களை கூறி சமாளிக்கின்றனர். ஆனால், குடிநீர் கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிகிறது.விவசாய நிலங்களில் இருந்து மண், தண்ணீர் உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வாகனங்களில் இடமாற்றம் செய்து கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அதிகாரிகள் விதிமீறல்கள் குறித்து கண்டுகொள்வதில்லை.ஒரு சில அதிகாரிகள் விதி மீறி தண்ணீர், மண் உள்ளிட்டவை கொண்டு செல்பவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. எனவே, வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் கோடைகாலத்தில் சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் திண்டாடும் சூழ்நிலை உருவாகிவிடும்.

அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் போலிகள் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. ஒரு சிலர் தண்ணீரை சுத்திகரிக்காமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தண்ணீர் பாட்டில்கள் மீது காலாவதி தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்படுவதில்லை. இதனால், உடல் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, குடிநீர் பாட்டில்கள் விற்பனை குறித்தும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

Related Stories: