×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து காங். உண்ணாவிரதம்

தக்கலை,  பிப்.17 :  60 ஆண்டுகளாக பாதுகாத்த துறைகளை 60 நாட்களில் விற்கின்றனர் என்று வசந்தகுமார் எம்பி கூறினார்.மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள்  பதிவேடு,  தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிடக்கோரி குமரி மேற்கு  மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தக்கலையில்  நடைபெற்றது.  மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராேஜஷ்குமார் எம்எல்ஏ, தலைமை வகித்தார்.  மாநில செயல் தலைவர் வசந்தகுமார் எம்பி, தொடங்கி வைத்தார். மாநில பொது  செயலாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். இதில் பிரின்ஸ்  எம்எல்ஏ., மாவட்ட பொருளாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், ஒழுங்கு நடவடிக்ைக  குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், டாக்டர் பினுலால் சிங்,  நிர்வாகிகள்  ஜோண்ஸ் இம்மானுவேல், ஜாண் இக்னேஷியஸ், புரோடி மில்லர்,  வின்சென்ட் ராஜா,  தக்கலை ஊராட்சி ஒன்றிய தலைவர் அருள் ஆன்டனி, வட்டார  தலைவர்கள் ஜாண்  கிறிஸ்டோபர், ஜெகன்ராஜ், காஸ்டன் கிளீட்டஸ், என்.ஏ.குமார்,  டென்னிஸ்,  கிறிஸ்டோபர், பால்ராஜ், மோகன்தாஸ்,  நகர தலைவர் ஹனுகுமார்,  அருள்தாஸ், நகர  ஓபிசி தலைவர் ேஜசுராஜ், மாவட்ட ஜமா அத் கூட்டமைப்பு தலைவர்  எம்.ஏ.கான், மமக மாவட்ட செயலாளர் முகமது உவைஸ், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர்  ஜாகிர் உசேன் உள்ளிட்டவர்கள் கலந்து ெகாண்டனர்.

வசந்தகுமார் எம்பி  பேசியதாவது: ராஜீவ் காந்தி கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் பெயரை மாற்றி  செயல்படுத்தி வருகின்றனர். 60 ஆண்டுகளாக பாதுகாத்த துறைகளை 60 நாட்களில்  விற்கின்றனர். இந்தியா அமைதியாக இருக்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். தொலை நோக்கு பார்வை இல்லாத அரசாக பா.ஜ. அரசு உள்ளது. குடியுரிமை  திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களை தனியாக பிரிக்க பார்க்கிறார்கள்.  எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளது மத்திய அரசு. அமைதியையும், அகிம்சையையும்  காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.  மாநில பொது செயலாளர்  திருச்சி வேலுச்சாமி பேசியதாவது:அசாமில் குடியுரிமை பதிவேட்டால் 19 லட்சம்  பேர் குடியுரிமை இழந்துள்ளனர். இதில் 6 லட்சம் பேர் முஸ்லிம்கள். 13 லட்சம்   பேர் இந்துக்கள். குடியுரிமை சட்டத்தை விவாதமின்றி ஒரே நாளில் நிறைவேற்ற  வேண்டிய அவசியம் என்ன. அதிமுக எம்பிக்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால்  இந்த சட்டம் நிறைவேறியிருக்காது. இன்று அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது இந்த  சட்டம். பெண்கள் வீதியில் இறங்கி போராட வந்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக  இருக்கும் போதே மோடியை பார்க்க ெசன்ற 50 எம்.பி.க்களுக்கு அனுமதி  வழங்கவில்லை. காங்கிரஸ் தான் தேச நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை உள்ள  கட்சி. இவ்வாறு பேசினார்.

உண்ணாவிரதத்தில் ராேஜஷ்குமார் எம்எல்ஏ பேசியதாவது: ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து  வந்த நேரத்தில் மதத்தை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய அரசு செய்து  வருகிறது. இந்தியாவில் இந்திய பிரஜை அகதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.  சொந்த மண்ணிலே மக்களை அகதிகளாக்கும் சட்டம் தான் குடியுரிமை திருத்த  சட்டம். சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடையது.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...