×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர், பிப்.17: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர் அறிக்கை: திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.க ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (18ம் தேதி) மாலை 4 மணியளவில் திருவள்ளூரில் உள்ள பெரம்பூர் சீனிவாசா பார்ட்டி ஹால் முதல் மாடியில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன் தலைமையில் நடைபெற உள்ளது. நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்கிறார்.இதில் எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி,  வி.ஜி.ராஜேந்திரன்,  மாநில, மாவட்ட நிர்வாகிகள் இ.பரந்தாமன், சி.ஜெரால்டு, ஆர்.டி.இ.ஆதிசேஷன்,  நடுகுத்தகை ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரிஸ்ரீதரன், மு.ராஜேந்திரன், ம.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற மார்ச் 1ம் தேதி திமுக தலைவரின் பிறந்த நாள் விழா குறித்தும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதால் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Advisory Meeting ,DMK ,Thiruvallur Southern District ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆலோசனை கூட்டம்