×

திருவள்ளூர் 14வது வார்டில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும்

திருவள்ளூர், பிப். 17: திருவள்ளூர் நகராட்சி 14வது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை உடனடியாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏவிடம் முன்னாள் கவுன்சிலர் மனு அளித்தார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம்  18வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஜி.ஆர்.ராஜ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் நகராட்சியில் பழைய 18வது வார்டு, தற்போது புதிய 14வது வார்டுக்கு உட்பட்ட வி.எம்.நகர், ஜெயின் நகர், சமாரியாஸ் நகர், அகிம்சா நகர் பகுதிகள் அமைந்துள்ளன. இந்நகர் பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் நகராட்சி நிர்வாகத்தினால் செயல்படுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்,  பாதாள சாக்கடை இணைப்பு பெறமுடியாமல், தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நகர்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்துமாறு பலமுறை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்நகர்களை ஆய்வு செய்து, இங்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அவருடன் முன்னாள் நகரமன்றத் தலைவர் பொன்பாண்டியன் உடனிருந்தார்.

Tags : Thiruvallur ,
× RELATED திருவள்ளூரில் பதுங்கி இருந்த வட...