×

ஊத்துக்கோட்டையில் பள்ளி ஆண்டு விழா

ஊத்துக்கோட்டை, பிப். 17: ஊத்துக்கோட்டையில்  கோதண்டராமன் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதில் பள்ளியின் தாளாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் துரைசாமி   வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஷேக்தாவுத், கிராம கல்விக்குழு தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் கலந்துகொண்டு பள்ளியில் பாட்டு, பேச்சு, கட்டுரை, கபடி உள்ளிட்ட  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுடன் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியர் நரசிம்மன் நன்றி கூறினார்.


Tags : School Year Anniversary ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...