×

திருத்தணியில் குடியிருப்பில் தொங்கும் மின் வயர்களால் ஆபத்து

திருத்தணி, பிப். 17: திருத்தணி பகுதி குடியிருப்புகளில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் ஆபத்து உள்ளது. எனவே, அவற்றை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணியில் முருகப்ப நகர், குமரன் நகர், முருகப்ப நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளாக விளங்குகிறது. தற்போது புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் மின்கம்பங்களில் இருந்து செல்லும் மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியாக வீடுகள் கட்டுவோர் தேவையான மூலப்பொருட்களை லாரிகளில் கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். குறிப்பாக, முருகப்ப நகரின் நுழைவாயிலில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.  எனவே எவ்வித அசம்பாவிதங்கள் முன்பு மின்வாரிய அதிகாரிகள் மேற்கண்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின்ஓயர்களை சீரமைக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : apartment ,
× RELATED சிமென்ட் பூச்சு உதிர்ந்த கம்பங்கள்...