×

திருமலை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், பிப். 17: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில் சென்சார் அடிப்படையிலான இணையதள தரவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருமலை பொறியியல் கல்லூரி மற்றும்  ஸ்பைரோ சொலுயூஷன்ஸ் பிரைவேட் லிட். இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார்.

காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் மனோகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக்  கருத்தரங்கில் பி.இ கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், பி.டெக் உள்ளிட்ட பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இக்கருத்தரங்கமானது சிறப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக  கூறினார்கள். மேலும் இக்கருத்தரங்கில் பிற கல்லூரி மாணவர்களும் பங்குபெற்று பயன்பெற்றனர்.

Tags : Seminar ,Tirumalai Engineering College ,
× RELATED எட்டயபுரத்தில் கருத்தரங்கு