×

செய்யாற்று படுகையில் மணல் கொள்ளை 2 பேர் கைது

உத்திரமேரூர், பிப். 17: உத்திரமேரூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள செய்யாற்று படுகையில் நேற்று முன்தினம் இரவு சாலவாக்கம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்யாற்று படுகையில் திருட்டுத்தனமாக மாட்டுவண்டியில்  மணல் கொள்ளையடிப்பது தெரியவந்தது.

உடனே அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் புல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி (56), மற்றும் மோகன் (45) ஆகிய இருவரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்  இருவரையும் கைது செய்த சாலவாக்கம் போலீசார் மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மதுவிற்ற 2 பேர் கைது 58 பாட்டில்கள் பறிமுதல்