×

செங்கல்பட்டு அருகே சுடுகாட்டு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் வயர்கள்

செங்கல்பட்டு, பிப். 17: செங்கல்பட்டு நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சியில் இறந்தவர்களின் சடலங்களை செங்கல்பட்டு பைபாஸ் சாலையின் அருகில் பழவேலி பாலாற்றுப்பகுதியில் அடக்கம்  செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு இங்கு 3 அல்லது 4 சடலங்களும் அடக்கம் செய்யப்படுகின்றன. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப டிராக்டரில் ஒரு 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று  அடக்கம் செய்வது வழக்கம்.

இறுதி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மின் வயர்கள், கேபிள் வயர்கள் ஆங்காங்கே குறுக்கே உள்ளன. இதனால் இறுதி ஊர்வலம் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. செங்கல்பட்டு பழவேலி பாலாற்றின் அருகே அதிக மின் அழுத்தம் கொண்ட  மின் வயர் தாழ்வாக குறுக்கே செல்வதால் சவஊர்வலம் செல்லும் வாகனங்களை தடுக்கிறது. இறுதி ஊர்வலம், மின் வயரில் பட்டு மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. சிலர் மின் வயர்களை பாதுகாப்பற்ற முறையில் கம்புகள் மூலமாக  தூக்குவதால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இறுதி ஊர்வலம் செல்லும் பாதைகளில் குறுக்கே மின் ஒயர்களை உயரமான இடத்தில் அமைக்க வேண்டும். அல்லது மாற்று இடத்தில் மின் ஒயர்களை அமைக்க வேண்டும். இதனால் இறுதி  ஊர்வலம் செல்லும்போது தடங்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இறுதி ஊர்வலத்தின்போது மேலும் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் உள்ளது. எனவே தடையாக உள்ள கேபிள் மின் வயர்களை  மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Chengalpattu ,fireplace ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...