×

காஞ்சி கல்வியியல் கல்லூரியில் வர்த்தக கல்விக்கான வாய்ப்புகள் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், பிப். 17: காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி கல்வியியல் கல்லூரியில் வர்த்தக கல்விக்கான வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.இந்தக் கருத்தரங்கிற்கு பக்தவச்சலம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வாமனன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சீத்தாராமன் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார். சிறப்பு  அழைப்பாளராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் கலந்துகொண்டு, வர்த்தக கல்விக்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றி விழா மலரை வெளியிட்டார்.

இந்தக் கருத்தரங்கை கல்லூரி உதவிப் பேராசிரியை மீனாட்சி ஒருங்கிணைத்தார். கருத்தரங்கில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்ரும் காஞ்சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Opportunity Seminar for Business Education ,Kanchi College of Education ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...