×

மாமல்லபுரம் பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

மாமல்லபுரம், பிப். 17: மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்களான  வெண்ெணய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவைகளை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு  செல்கின்றனர். ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறுகையில், “பிரதமர் மோடி மற்றும் சீன நாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர். பின்பு, புராதான  சின்னங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அடிப்படை வசதியான குடிநீர் வசதி முறையாக ஏற்படுத்தி கொடுக்கவில்லை.. இதுகுறித்து  பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் மெத்தன போக்கையே கடைபிடித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேவையான இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து சுற்றுலா பயணிகளின் தாகத்தை தீர்க்க வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.


Tags : area ,Mamallapuram ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...