கோயம்பேட்டில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் வரும் 22ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் சொகுசு கப்பல் நிறுவனங்கள், 5 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஹோட்டல்கள் பங்கு பெற்று வேலை அளிக்கின்றன. இந்த முகாமில் 8, 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங்  படித்தவர்கள், படித்துக்கொண்டு இருப்பவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்று வேலையை பெற்றுக்கொள்ளலாம்.இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மே, ஜூன் மாதங்களில் வேலைக்கு செல்ல இதில் பங்கேற்று இப்போதே வேலையை உறுதி செய்துகொள்ளலாம். கல்லூரி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பங்கேற்கும் மாணவ,  மாணவிகளுக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது. அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: