மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் : இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: மெட்ரோ ரயில்நிலையங்களில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பின்வரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று மாலை 5 மணிக்கு சென்ட்ரல் முதல் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் ஆன் தி ஸ்டீரிட் ஆப் சார்பிலும், நாளை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆன்தி ஸ்டீரிட் ஆப் சென்னை சார்பில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும் (தெரு நிலை) இசை மற்றும் கலை நிகழ்ச்சி  நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்புடன் இணைந்து நாளை இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு (ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி) இலவச பல தேர்வு கேள்வி அடிப்படையிலான போட்டி, பாலா விகாஸ் நாடகம் இது பாலா விகாஸின் மாணவர்களால் நிகழ்த்தப்படுகிறது. இந்த நாடகம் சமூக விழிப்புணர்வு மற்றும் ஒரு குடிமகனின் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்நிகழ்ச்சி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

Related Stories: