×

சேலத்தில் ஒரே நாளில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

சேலம், பிப். 13: சேலத்தில் ஒரே நாளில் 2 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் சூரமங்கலம் அருகேயுள்ள மோட்டூரைச்சேர்ந்தவர் லோகநாதன்(19). கூலி தொழிலாளியான இவர், பிளஸ் 1 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், அவரை கடத்திச் சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை மீட்டனர். வாலிபர் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் சூரமங்கலம் பனங்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(26). ஆட்டோ டிரைவர். இவர் 14 வயதான 9ம்வகுப்பு மாணவியை கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை மீட்டனர். ஆட்டோ டிரைவர் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே நாளில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : juveniles ,
× RELATED ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா...