சேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சேலம், பிப்.13:சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையிலான உதவி பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, சேலம்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிய தகுதிவாய்ந்த வழக்கறிஞர் மற்றும் குழு வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கால அவகாசம் வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு “www.ecourts.gov.in/tn/salem’’  என்ற வலைதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.02.2020. வரும் 17ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: