தீண்டாமை சுவரை அகற்ற ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.13: சேலம் ஒன்றியம் காட்டுமரக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத்தலைவர் ரெஜீஸ்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் குழந்தைவேல், ரமணி, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் ஒன்றியம் சன்னியாசிகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டுமரக்குட்டையில் சுமார் 70க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காலகாலமாக இவர்கள் பயன்படுத்தி வந்த பொதுபாதையை தடுத்து தீண்டாமை சுவர் கட்டியுள்ளதால், கிராமமக்கள் பாதையின்றி பெரும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, பொது பாதையை தடுத்து கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: