×

வாகனம் மோதி மேஸ்திரி பலி

இடைப்பாடி, பிப்.13:  இடைப்பாடி அருகே தேவூர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி(45), கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் நள்ளிரவில், டூவீலரில் கைகோளபாளையம் பால் கூட்டுறவு சங்க சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீராசாமி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த தேவூர் போலீசார், விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தேவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Maestri ,
× RELATED வாகன ஒட்டிகளுக்கு சலுகை: பிப்.1-ல்...