×

அங்கன்வாடி மையம் அருகில் ஆபத்தான நிலையில் திறந்த வெளிக்கிணறு

திருச்செங்கோடு, பிப்.13: மல்லசமுத்திரம் ஒன்றியம் பெரிய கொல்லபட்டியில் அங்கன்வாடி மையம்  செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ரேஷன் கடை, துவக்கப்பள்ளி ஆகியவை  உள்ளன. இதன் அருகே பயன்பாட்டில் இல்லாத தரைக்கிணறு உள்ளது. சிறிது தண்ணீருடன், சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், கிணற்றை சுற்றிலும் செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள், ஆபத்தை அறியாமல் கிணற்றின் அருகில்  விளையாடி வருகின்றனர். அடிக்கடி குழந்தைகள் கிணற்றை எட்டிப்பார்ப்பதால் உள்ளே விழ வாய்ப்புள்ளது. எனவே, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திறந்த வெளிக் கிணற்றுக்கு கம்பி வலை போட வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Tags : space ,center ,Anganwadi ,
× RELATED சேலம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல்