×

பள்ளிபாளையத்தில் தொழுநோய் பாதிப்பு கணக்கெடுப்பு பணி

பள்ளிபாளையம், பிப்.13: பள்ளிபாளையம் வட்டாரத்தில் தொழுநோயாளிகள் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வீடு வீடாக சென்று தேமல், தோல் தடிப்பு, உணர்ச்சியற்ற புள்ளிகள் உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்களை கண்டறிந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சரவணன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள், பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர்களை கொண்ட, இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் 26 ஆரம்ப நிலை தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு நோயில் இருந்து மீட்க போதிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கணக்கெடுப்பு பணியின் போது, மேலும் 2 பேருக்கு தொழுநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையில் நோயின் தன்மை இருப்பதால், இவர்கள் எளிதாக குணமடைய தேவையான மருத்துவ சிக்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : school ,
× RELATED விவசாய பணிக்கு டீசல் வாங்கி வரும்போது விவசாயியை மறித்து பைக் பறிமுதல்