×

ஓசூர் திமுக பிரமுகர் கொலை ரகசிய இடத்தில் வைத்து 4 பேரிடம் விசாரணை

ஓசூர், பிப்.13: ஓசூர் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரணடைந்த 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் இமாம்பாடாவை சேர்ந்தவர் திமுக பிரமுகர் மன்சூர்(49). கடந்த 2ம் தேதி ஓசூர் அரசு பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன், சந்தோஷ்குமார், யஸ்வந்த் குமார், கோவிந்தராஜ் ஆகியோர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் 4 பேரையும் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், 4 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஓசூர் டவுன் போலீசார் 4 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hosur DMK ,murder ,
× RELATED கொரோனா வதந்தி பரப்பிய பாஜ பிரமுகர் கைது