×

ராயக்கோட்டை அரசு பள்ளியில் 510 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

கிருஷ்ணகிரி, பிப்.13: ராயக்கோட்டை அரசு பள்ளியில் 510 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை முருகன் எம்எல்ஏ வழங்கினார். ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை புனிதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேப்பனஹள்ளி  எம்எல்ஏ முருகன் பங்கேற்று, 288 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிடிஏ நிர்வாகிகள் பாலசந்தர், சீனிவாசன், சுப்பிரமணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சின்னராஜ், சாந்திஅரியப்பன், நாகராஜன், முன்னாள் துணைத் தலைவர் நாகராஜ், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சந்திரன் நன்றி கூறினார். இதேபோல் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 222 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை முருகன் எம்எல்ஏ வழங்கினார்.

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த இராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாப்பா கவுண்டர், ரங்கன் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சிவப்பிரசாத், தனசீலன், சின்னசாமி, விக்ரம், கணேசன், ராஜா, செல்லப்பா, ராஜேந்திரன், கவிதா, பிரியதர்ஷினி, சங்கீதா, கவிதா, சந்திரகலா, மாலதி, கோமதி, வானதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 97 சைக்கிள்களை வழங்கினர். பட்டதாரி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

Tags : Royal Government School ,
× RELATED செந்தாரப்பட்டியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்