×

கலை மற்றும் விளையாட்டு விழா பிஎஸ்வி கல்வியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

கிருஷ்ணகிரி, பிப்.13: கிருஷ்ணகிரி அருகே, மிட்டப்பள்ளியில் இயங்கி வரும் பிஎஸ்வி கல்வியியல் கல்லூரியில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளை நிறுவனர் டாக்டர் செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தார். இதில் மாவட்ட அளவில் இயங்கி வரும் 10 கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை கல்லூரி செயலர் விவேக் துவக்கி வைத்தார். போட்டி நடுவராக கல்வியியல் நுட்பவியல் உதவி பேராசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான  செந்தில்குமரன் செயல்பட்டு, வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தார். இதில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று பிஎஸ்வி கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். அவர்களையும், உடற்கல்வியாசிரியர் முரளியையும் இயக்குநர் புஷ்பாசெல்வம், இணை செயலாளர் சாந்தமீனா, கல்வியியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலை, நூலகர் சின்னத்தம்பி ஆகியோர் பாராட்டினர். 

Tags : Sports Festival BSV College of Education Students Achievement ,
× RELATED மர்மநோய் தாக்கியதா? அரசு கலை கல்லூரியில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு