×

காரிமங்கலத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்

காரிமங்கலம், பிப்.13: காரிமங்கலத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறும் சிறப்பு முகாம் நடந்தது. காரிமங்கலம் திரௌபதி அம்மன் கோயிலில், உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம், உணவு பாதுகாப்பு துறை மற்றும் வணிகர் சங்கம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, காரிமங்கலம் வணிகர் சங்க தலைவர் மாது தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரவி, செயலாளர் சிவக்குமார், சுரேஷ், கணேசன், மனோகரன், திருப்பதி, சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா கலந்து கொண்டார். இந்த முகாமில் ஓட்டல், பேக்கரி கடைகள், மளிகை கடைகள், டீ கடைகள், பெட்டிக் கடைகள், பலகார கடைகள், தள்ளுவண்டி கடைகள், போன்ற வணிகம் செய்வோர் இம்முகாமில் கலந்து கொண்டு, புதிதாக உரிமம், புதுப்பித்தல் விண்ணப்பங்களை 75க்கும் மேற்பட்டோர் பெற்று கொண்டனர்.

Tags : Special Camp ,
× RELATED என்எஸ்எஸ் சிறப்பு முகாம்