×

மாயமான மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு

தர்மபுரி, பிப்.13: பென்னாகரம் அருகே பெத்தம்பட்டி பகுதியில் ஒரு கிணற்றில் பெண் சடலம் மிதந்தது. இதுகுறித்து பொதுமக்கள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம், பெத்தம்பட்டி பகுதியை சேர்ந்த நீலகிரி என்பவரின் மனைவி அங்கி (95) என்பதும், அவரது கணவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்து அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : recovery ,well ,
× RELATED புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை...