×

துறையூர் அருகே டூவீலர்கள் மோதல் விவசாயி பலி

துறையூர், பிப்.13:  சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா செங்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சிவா(26), விவசாயி. இவர் நேற்று தனது டூவீலரில் த.முருங்கப்பட்டி சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது த.மங்கப்பட்டி அருகே எதிரே கொப்பம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக்(23) என்பவர் ஓட்டி வந்த டூவீலரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து 108 மூலம் இருவரும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவா உயிரிழந்தார். கார்த்திக் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : collision ,Thuraiyur ,
× RELATED பேருந்து மோதி விவசாயி பலி