×

மனைவியுடன் கள்ளக்காதல் ‘குடிக்காதே’ மனைவி திட்டியதால்

திருச்சி, பிப்.13: திருச்சி மதுரை ரோடு ஜெயில்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 2வது தளத்தில் வசிப்பவர் ஆமோஸ்ராஜ்(45). காந்தி மார்க்கெட்டில் பழக்கடை வைத்துள்ளார். இவரது தம்பி டென்னிஸ்ராஜ்(38). இவர் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்துள்ளார். இவர் மனைவியுடன் அண்ணன் வசிக்கும் அதே கட்டிடத்தில் தரைதளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தம்பி மனைவியுடன் ஆமோஸ்ராஜ்க்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த டென்னிஸ்ராஜ் அண்ணனிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு காந்தி மார்க்கெட் 6ம் எண் கேட்டில் ஆமோஸ்ராஜ் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டென்னிஸ்ராஜ் தனது மனைவியுடன் உள்ள உறவை விட்டுவிடும்படி அண்ணனிடம் கூறினார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது டென்னிஸ்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இதை தடுத்த அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆமோஸ்ராஜை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து டென்னிஸ்ராஜை கைது செய்தனர்.

Tags :
× RELATED சுத்தியலால் அடித்து மனைவி படுகொலை: கணவன் கைது