×

வெவ்வேறு இடத்தில் பணம், செல்போன் பறிப்பு இளம்பெண், ரவுடி உள்பட 3 பேர் கைது

திருச்சி, பிப்.13: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் பணம், செல்போனை பறித்த இளம்பெண், ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி காவிரி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(60). இவர் மத்திய பஸ் நிலையம் செல்வதற்காக ஏர்போர்ட் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற இளம்பெண் ராஜேஸ்வரியின் கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த ரூ.930 பறிக்க முயன்றார். அப்போது அவர் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் ஓடிவந்து இளம்பெண்ணை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பழைய பாலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மது மனைவி உமா(22) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் யூஜின்(20). இவர் பீமநகரில் உள்ள பிரியாணி கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், யூஜினிடமிருந்து ரூ.150ஐ பறித்துக்கொண்டு ஓடினர். அவரை அப்பகுதியினர் விரட்டிப்பிடித்து பாலக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கூனிபஜார் கோரிமேட்டை சேர்ந்த ரவுடி பாண்டி (எ) வீரமுத்து (24) என தெரியவந்தது. இவர் மீது 8 வழக்குகள் உள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அம்சவள்ளி (28). இவர் நேற்றுமுன்தினம் ஓயாமரி காவிரி படித்துறையில் செல்போனை வைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த வாலிபர் செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினார். இதைபார்த்த அம்சவள்ளி கூச்சலிட்டதால் பொதுமக்கள் அவரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி பட்டவர்த் ரோட்டை சேர்ந்த சண்டி (எ) சக்திவேல்(23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் உள்ளது.

Tags : persons ,places ,teenager ,Rowdy ,
× RELATED ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது