×

இன்சூரன்ஸ் மோசடி வாலிபர் கைது

போடி, பிப்.13: வாகனங்களுக்கு போலி இன்சூரன்ஸ் வழங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜபிரபு (25). இவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு காப்பீடு எடுப்பதற்காக போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த சசிக்குமார் (36) என்பவரை அணுகியுள்ளார். சசிக்குமார் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் எனக் கூறி பிரிமியம் தொகை பெற்றுக்கொண்டு வாகன காப்பீடு பத்திரம் வழங்கினார். இந்த வாகன காப்பீடு முடிவடைந்ததால் புதுப்பிக்க சென்றபோது, போலியான காப்பீட்டு பத்திரம் என்பது தெரிந்தது. இதுகுறித்து ராஜபிரபு போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சசிக்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை செய்ததில் சசிக்குமார் இதுபோல் 30க்கும் மேற்பட்டோரிடம் போலி வாகன காப்பீடு பத்திரம் வழங்கி ரூ.1 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Tags : Insurance fraudster ,
× RELATED பென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு...