×

விழிப்புணர்வு பேரணி

தேனி, பிப். 13: தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மாநில அளவிலான விழிப்புணர்வு ரதம் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடந்தது.தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான விழிப்புணர்வு ரதம் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடந்தது. இதனை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரெட்கிராஸ் அமைப்பின் நலத்திட்டபணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து விழிப்புணர்வு ரதம் கடந்த 6ம் தேதி புறப்பட்டு விருதுநகர் மாவட்டம் வழியாக தேனிக்கு வந்தது. இந்த ரதத்தோடு, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புறப்பட்டு சென்றது. இப்பேரணி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி பிசிபட்டி, கோட்டூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், பண்ணைப்புரம்,போடி, தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டியை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் டாக்டர் தியாகராஜன், செயலாளர் சுருளிராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திருப்பைஞ்சீலியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி