×

நிம்மதியாக நடக்க முடியவில்லை கம்பம் மக்களை மிரட்டும் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கம்பம், பிப்.13: கம்பத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் மக்கள் வீதிகளில் நடமாட முடியவில்லை. எனவே நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பத்தில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கம்பம் நகர் முழுக்க தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பவர்களை கடிக்க முயல்கிறது. டூவீலர்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதனால் சில நேரங்கள் விபத்து நடக்கிறது. குறிப்பாக கம்பம் காந்திஜி வீதி, நாட்டுக்கல், தாத்தப்பன்குளம், கம்பம்மெட்டு காலனி, வடக்குப்பட்டி போன்ற ஏரியாக்களில் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் தெரு நாய்க்கு பயன்படுகின்றனர்.

தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் பொதுமக்கள் பொது இடங்களில் நடக்கவும் அச்சப்பட்டு கொண்டே நடந்து செல்கின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பத்தில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாய்கள் டூவீலர்களில் செல்பவர்களை விரட்டி விரட்டிச் சென்று கடிக்கின்றது. இதனால் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. ஒரு சில தெரு நாய்கள் இரவில் நடந்து செல்பவர்களையும் கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?