×

இலவச தக்காளி, கத்தரி நாற்று

கம்பம், பிப்.13: கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியதர்ஷினி கூறுகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி உற்பத்தியை பெருக்கும் விதத்தில் விவசாயிகளுக்கு தக்காளி, கத்தரி நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன்படி பெரியகுளம் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக தக்காளி மற்றும் கத்தரி நாற்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் எண்ணிக்கையிலான தக்காளி நாற்றுகள், கத்தரி ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் மூன்று ஆகியவற்றை கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கண்துடைப்புக்காக நடந்த ஆய்வு...