×

கல்லூரி மாணவிகளுக்கு மகளிர் பஸ் கோரி மனு

சிவகங்கை, பிப்.13: சிவகங்கையில் உள்ள கல்லூரி மாணவிகள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்படுவதால் மகளிர் பஸ் மற்றும் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.  கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கையில் மன்னர் துரைச்சிங்கம் அரசுக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து அதிகப்படியான மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகின்றனர்.

ஆனால் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இருக்கும் பஸ்களில் அதிகப்படியான நெரிசலுடன் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் நின்று வர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வரும் பஸ்களை விட்டாலும் வேறு பஸ்கள் இல்லை.  எனவே கல்லூரி வேலை நேரத்தை கணக்கில் கொண்டு மகளிர் பஸ்களும் மற்றும் கூடுதல் பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : college students ,
× RELATED முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை...