×

திருமண விழா வரவேற்பு

ாமநாதபுரம், பிப்.13: ராமநாதபுரம் ஷிபான் மருத்துவமனை மற்றும் ஷிபான் நூர் குளோபல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் மன்சூர் இப்ராஹிம்-டாக்டர் நூருல் ஹவ்வா ஆகியோரின் மகன் டாக்டர் முகமது நவுபல் அஃப்டாலின்-டாக்டர் ஷம்யா திருமண விழா கடந்த 9ம் தேதி நாகர்கோயில்நடைபெற்றது. தொடர்ந்து திருமண வரவேற்பு விழா ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் நடந்தது.

விழாவிற்கு வந்தவர்களை டாக்டர் மன்சூர், நூருல் ஹவ்வா ஆகியோர் வரவேற்றனர். விழாவில் டாக்டர் இ.எம்.அப்துல்லா மற்றும் டாக்டர் இ.எம்.இப்ராஹிம் கும்பத்தினர், மேலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தார்கள், வெளிநாடு வாழ் தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Wedding ceremony reception ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...