×

அஜ்மீர் செல்லும் விரைவு ரயில் ராமநாதபுரத்தில் நின்று செல்ல கோரிக்கை

கீழக்கரை, பிப்.13:  ராமேஸ்வரத்திலிருந்து அஜ்மீர் வரை செல்லும் ரயிலை, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்றும், ராமேஸ்வரத்திருந்து மதுரை வரை உள்ள ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம், மதுரை தெற்கு ரயில்வே துறை கோட்ட மேலாளர் மற்றும் எம்பி நவாஸ்கனிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டிணம், சேதுக்கரை, உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் கோவில் மற்றும் தர்ஹா போன்ற புண்ணியஸ்தலங்கள் உள்ள பகுதியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து அஜ்மீர் வரை மற்றும் அஜ்மீரிலிருந்து ராமேஸ்வரம் வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மாவட்டத்தின் தலைமை இடமாக இருக்கு, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் இந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அஜ்மீர் செல்வதென்றால் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு சென்று ரயில் ஏறவேண்டியுள்ளது. இதனால் பொருள் செலவு மற்றும் நேரவிரையம் ஏற்படுகிறது. ஆகவே அஜ்மீர் வரை செல்லும் ரயிலை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும். மேலும் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரை உள்ள ரயில் பாதையை மின்மயமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Ajmer ,Ramanathapuram ,
× RELATED நாடு முழுவதும் 31ம் தேதி வரை பயணிகள்...